Friday, October 11, 2013

மழை


மழையே
உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் 
ஏன் தெரியுமா ?,
நான்  இருக்கிற எந்த நிலையிலும்
என்  மேல் அவ்வளவு உரிமையோடு வந்து
தழுவுகிறது நீ மட்டும்தான்

மனிதநேயம்





மனிதனுக்குள்
மனிதனை தேடினேன்
அங்கு
மனிதனை கொன்றுவிட்டு
பல மிருகங்கள்
வாழ்ந்து கொண்டிருக்கிறது

நீ மட்டும் போதும்



என்னை அணைக்க
என் உணர்வுகளை உணர
என் கண்ணீரை துடைக்க வந்த
என் வசந்தமே... என்னோடு..
நீதான் என்றும் வேண்டும்
என் உயிருக்கும்...
உணர்வுண்டு... என்று...
உணர்த்திய என் செல்லமே..
நீ மட்டும் போதும் எனக்கு...
தூரம் எதற்குதான்
தடை விதிக்க முடியும்...
நம் அன்பிற்கும்
தூரம் ஒரு தடையா?
எதுவாக இருக்கட்டும்...
தூரமோ...அல்லது துயரமோ...
நீ மட்டும் போதும்...
என்னோடு என்றும்....
இருப்பாயோ வாய்திறந்து
பதில் சொல் என் அன்பே!

ரோஜா மலர்


ரோஜா மலரே
ஏன் ? வாடிவிட்டாய் -உன்னை
கவிஞர்கள் பெண்களுக்கு
நிகராக கூறுகிறார்கள் என்றா ?
கவலைபடாதே
அவர்கள் மூடர்கள்
எனக்கு மட்டும்தான் தெரியும்
நீ பெண்களைவிடவும்
அழகானவை
மென்மையானவை
என்று ...

Tuesday, October 8, 2013

பெண்மை




பெண்ணே !
உன் உடலை
காட்டுவதை விட
உன் உள்ளத்தை காட்டு
உன் பெண்மையே
உன்னை கண்டு
புண்ணகிக்கும்

கணவன்




பெண் இனமே
தனக்கு வரபோகும்
கணவன்
ராமனாக இருக்கவேண்டும்
என்று நினைக்காதீர்கள்
நல்ல மனிதனாக
இருக்கவேண்டும்  என்று
நினையுங்கள்
ஏன்  என்றால்
ராமனும் ஒரு காலத்தில்
தன் மனைவியை
சந்தேகபட்டானே